Friday, October 14, 2011
மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் தௌலத் இப்ராஹிமிற்கும், இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மாலைதீவு படையினருக்கு இலங்கையில் பயிற்சி வழங்குதல், இருநாடுகளுக்கும் இடையிலான கரையோரப் பாதுகாப்பு போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சர் தௌலத் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு சென்றுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் தௌலத் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஒக்டோபர் 11 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 14 ஆம் திகதிவரையான அமைச்சரின் இவ் வருகையின் போது தற்போது சேவையில் உள்ள முப்படைத் தளபதிகளையும் சந்திக்க விரும்புவதாக, அவர் அதிமேதகு ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கைக்கான மாலைத்தீவு உயர் ஸ்தானிகரின் கூற்றுப்படி, மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையானது தமது பயிற்சிகளுக்காக இலங்கையின் சேர் ஜோன் கொதளாவள பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அனுமதியை கோரியுள்ள நிலையில் அதி மேதகு அமைச்சர் கொதளாவள பாதுகாப்பு பல்கலைக்கழகத்தையும் பார்வையிடவுள்ளார்.

No comments:
Post a Comment