Friday, October 14, 2011

வன்முறை அரசியல் கண்டிக்கப்பட வேண்டியது என ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது!

Friday, October 14, 2011
வன்முறை அரசியல் கண்டிக்கப்பட வேண்டியது என ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் வன்முறைகளினால் இலங்கை மக்கள் பெரும் நெருக்கடிகளை ஏற்கனவே அனுபவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணம், போதைப் பொருள் போன்ற காரணிகளுக்காக அரசியல்வாதிகள் மோதிக் கொள்வது மறைப்பதற்கில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வறாhன சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்முறைச் சம்பவங்களினால் ஆளும் கட்சி ஈட்டிய மாபெரும் வெற்றியைக் கூட அனுபவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களினால் மக்கள் அரசியல் மீது வெறுப்பைக் காட்டக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment