
Wednesday, October 26, 2011அவுஸ்திரேலிய சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் சந்திப்பு வெற்றிகரமானதாக அமைந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்..
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்!
இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தம்முடன் இணைந்து செயற்படுமாயின் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக பொதுநலவாய அமைப்பு தெரிவிக்கிறது.
கடந்த காலங்களில் பொதுநலவாய அமைப்பு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா தெரிவித்தார்.
மனித உரிமைகளை பாதுகாப்பது பொதுநலவாய அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று எனவும் அதனைப் பாதுகாப்பதற்காக இவ்வமைப்பின் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் மனித உரிமைகள் தொடர்பில் பல தடவைகள் வலியுறுத்தி கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் பொதுநலவாய அமைப்பில் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரை நியமிக்கும் பிரேணைக்கு அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியாவும் தென்னாபிரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவிக்கிறார்.
எனினும் இம்முறை பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டை நடாத்தும் அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் அது தொடர்பிலான பிரேரணையொன்று மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச மட்டத்தில் விடுக்கப்படும் அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment