Wednesday, October 26, 2011

இரண்டு கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

Wednesday, October 26, 2011
கஞ்சா போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்றில் கஞ்சா போதைப்பொருளை விநியோகத்துக்கொண்டிருந்த போது இவர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தனமல்வில பகுதியில் இருந்து கஞ்சாவை எடுத்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து இரண்டு கிலோகிராம் எடையுடைய கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment