Wednesday, October 26, 2011அமைச்சுப் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் சீருடை அணிய வேண்டுமென்ற உத்தரவிற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கடமை நேரத்தில் சீருடை அணிய வேண்டியது கட்டாயம் என பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
எனினும், இந்த உத்தரவிற்கு ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு காரணமாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தனது அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நீக்கிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது விசேட அதிரடிப்படையினர் மட்டுமே அமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
முல்லேரியா சம்வத்தைத் தொடர்ந்து சகல அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சீருடை அணிய வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
சீருடை அணிந்து கடமையில் ஈடுபடுவதனால் அமைதியான சூழ்நிலைக்கு குந்தகம் ஏற்படலாம் என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சீருடை அணிய வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டால் அவர்களை கடமையில் ஈடுபடுத்திக் கொள்வது குறித்து மீள சிந்திக்க நேரிடும் என அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment