Tuesday, October 25, 2011
ஐக்கிய தேசியக் கட்சியைக் காப்பாற்றுவதாயின் கட்சியின் தலைவர் பதவி நீக்கப்பட வேண்டும் என அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளரான ருக்மன் சேனாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ருக்மன் சேனாநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி இன்று அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கட்சி ஆதரவாளர்கள் உட்பட சகலரும் கட்சியின் தலைவரை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தலைவராக ஒதுங்கிக்கொள்ளாது விட்டால் கட்சி சம்மேளனத்தைக் கூட்டியேனும் அவரை தலைவரை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ருக்மன் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கட்சியின் சம்மேளனத்தை கூட்டி இந்த தலைவரை நீக்குவதன் மூலம் கட்சியைக் காப்பாற்றுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்களான கருஜயசூரிய மற்றும் சஜித் பிரேதாஸ ஆகியோரிடம் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்வதாக ருக்மன் சேனாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment