Tuesday, October 25, 2011
இந்தியாவிற்கு உரித்தான அந்தமான் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கல்பிட்டிய – கந்தேகுளிய கிராமத்தின் மீனவர்கள் 7 பேரை விடுவிக்கக் கோரி இரண்டு தேரர்கள் இன்று முற்பகல் முதல் சாகும்வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் மீனவர்களின் உறவினர்களும் இணைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மார்ச் 10 ம் திகதி திருகோணமலை கடற்பிராந்தியத்தில் இருந்து சென்ற குறித்த மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை விடுவிக்கக்கோரி பல தடவைகள் மீன்பிடித்துறை சார்ந்த அதிகாரிகளை கோரியிருந்த போதும், அதற்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் எமது செய்திச் சேவை மீன்பிடித்துறை அமைச்சிடம் வினவியது.
இலங்கை மீனவர்கள் ஏழுபேரை விடுவிப்பது தொடர்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றிருப்பதாக அதன் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி, மீனவப் படகொன்றுடன் 5 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு நாளையதினம் நாடுதிரும்பவுள்ளதாக அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment