Thursday, October 6, 2011

மக்கள் யதார்த்தத்தை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்!

Thursday, October 06, 2011
23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறைவுபெற்றது. இந்தத் தடவை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கக் கட்சிக்கும், எதிர்கட்சியான ஐக் கிய தேசியக் கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி இடம்பெறும் என்று ஒரு சாரார் நம்பிக்கை வைத்திருந்த போதிலும் எதிர்க்கட்சியின் தேர் தல் பிரசாரம் ஏற்கனவே உட்கட்சி மோதல்களினாலும் வேட்பாளர்களி டம் இருந்து வந்த வாக்கு வேட்டை போராட்டத்தினாலும் பலவீனம் இழந்திருப்பதாக அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

தேர்தல்களில் வெற்றிமேல் வெற்றியீட்டி சாதனைகளை புரிந்துவரும் ஐக் கிய மக்கள் சுதந்திர முன்னணி கொழும்பு மாநகரம், கண்டி மாநகரம் உட்பட அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியைக் கைப்பற் றுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 8ம் திகதி சனிக்கிழமைய ன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர் பெருமக்களுக்கு ஒரு பெரும் பொறுப்பு இருக்கின்றது. தங்கள் பிரதே சத்திற்கு நேர்மையாக சேவை செய்யக்கூடிய, மக்களின் துன்ப துயரங் களை போக்கும் நற்பண்பாளர்களை இந்தத் தடவை வெற்றியடையச் செய்வது வாக்காளர்களின் கையில் இருக்கிறது.

சனிக்கிழமை நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களினால் பதவி யில் வீற்றிருக்கும் அரசாங்கத்தை அடுத்த பல ஆண்டுகளுக்கு பலவீ னப்படுத்தவோ, பதவி துறக்கச் செய்யவோ முடியாது என்ற உண் மையை வாக்காளர்கள் உணர வேண்டும். எங்களுக்கு நிர்வாகப் பொறு ப்பை ஒப்படைத்தால் நாம் இன்றைய அரசாங்கத்தை அதிகாரத்தில் இருந்து துரத்திவிடுவோம் என்று மேடைகளில் நிகழ்த்தும் ஆதாரமற்ற கூற்றுக்களை நம்பி மக்கள் ஏமாந்துவிடலாகாது.

ஒரு குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர்கள் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இருக்கும் வளங்க ளைப் பயன்படுத்தி அந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு திற மைமிக்கவர்களாக இருக்கிறார்களா என்பதை ஊர்ஜிதம் செய்த பின் னரே மக்கள் அவர்களுக்கு தங்கள் விலைமதிப்பற்ற வாக்குகளை அளி த்து சம்பந்தப்பட்டவர்களை அதிகாரபீடத்தில் அமர்த்த வேண்டும்.

இந்தப் பொறுப்பை சரியான முறையில் செயற்படுத்தாமல் வாக்காளர்கள் போலி வாக்குறுதிகளை அளிக்கும் சுயநலவாதிகளை அதிகாரத்தில் அம ர்த்தினால் அந்த உள்ளூராட்சி மன்றம் இப்போது இருக்கும் நிலையை விட மோசமடைந்து, அப்பிரதேசத்தில் வாழும் மக்களின் பிரச்சினை கள் தீர்க்கப்படாத நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தடவை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்கள் விலை மதிப்பற்ற வாக்குகளை பதிவு செய்யும் மக்கள் ஒரு விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற் படக்கூடிய கட்சிக்கு அல்லது அணிக்கு அந்தந்த பிரதேசங்களின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து அதிகாரத்தில் அமர்த்த வேண்டும்.

இல்லையானால் ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்ற நிலையே ஏற்படும். இதற்கு உதாரணமாக நாம் கொழும்பு மாநகரத்தை எடுத்துக் கொள்ள லாம். கொழும்பு மாநகர சபையை கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செலுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி என்பதை மக்கள் மறந்துவிட லாகாது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சேரி வீடுகளும், தோட் டங்களில் இருக்கும் சிறிய வீடுகளும் இன்றும் கொழும்பில் இருந்து வருகின்றன.

கடந்த ஈராண்டு காலத்தில் சாதனை வீரரான பாதுகாப்புச் செயலாளர் கோத் தபாய ராஜபக்ஷ அவர்களின் சிறந்த ஆளுமைத்திறன் காரணமாக கொழும்பு மாநகரம் இன்று புதுப்பொலிவுடன் ஒரு நவீன நகரத்தின் தோற்றத்தைப் பெற்றுள்ளது.

சேரிவீடுகளை தகர்த்து, சேரி வீடுகளில் வாழும் மக்களுக்கு நல்ல வச தியான மாடி வீடுகளை கட்டிக் கொடுப்போம் என்று அரசாங்கக் கட்சி அளிக்கும் வாக்குறுதிகளை நம்பாதீர்கள், அவர்கள் உங்களை கொழும் பில் இருந்து பலவந்தமாக வெளியிடங்களுக்கு இடம்பெயர வைப்பார் கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி செய்து வரும் போலிப் பிரசாரங் களை, இன்று கொழும்பு வாழ் மக்கள் குறிப்பாக சிறுபான்மை இனத் தைச் சேர்ந்த தமிழர்களும், முஸ்லிம்களும் அடியோடு நிராகரித்துள் ளார்கள்.

சொல்வதை செய்வேன், செய்வதை சொல்வேன் என்பதில் அசையாத நம் பிக்கை வைத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நான் எக்காரணம் கொண்டும் சேரி வீடுகளில் வாழும் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றமாட்டேன் என்று உறுதி மொழி அளித்து, அதனை உடனடியாக செயற்படுத்தும் முகமாக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கி, கொழும்பில் மாத்திரம் 35 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை இன்று வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மேயர் வேட்பாளர் தான் அதிகாரத் தில் அமர்ந்தால் மத்திய அரசாங்கத்தின் உதவியின்றி கொழும்பை நல்ல நிலைக்கு கொண்டு வருவேன் என்று அளித்திருக்கும் வாக்குறுதி செயற்படுத்தக்கூடியதொன்றல்ல, மத்திய அரசாங்கத்தின் உதவியும் அனுக்கிரகமும் இன்றி எந்தவொரு உள்ளூராட்சி மன்றமும் தனது பணிகளை சிறப்பாக நிறைவேற்ற முடியாது என்பதே யதார்த்தமாகும்.

எனவே, சனிக்கிழமையன்று வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வாக்காளப் பெருமக்கள் அரசாங்கத்துடன் இணைந்து தங்கள் பிரதேசத்தை எந்தக் கட்சி நல்ல முறையில் அபிவிருத்தி செய்யும் என்பதை நன்கு சிந்தி த்து ஒரு நல்ல முடிவுக்கு வந்து தங்களின் விலை மதிப்பற்ற வாக்கு களை பதிவு செய்ய வேண்டும். அவ்விதம் செய்தால் நாட்டில் ஜனநாய கம் தலைத்தோங்குவதுடன் நாடு பொருளாதார துறை உட்பட மற்றெ ல்லா துறையிலும் வளம் பெறுவதை எந்தவொரு சக்தியாலும் தடுத்து விட முடியாது.

No comments:

Post a Comment