Thursday, October 6, 2011

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு!

Thursday, October 06, 2011
எஞ்சிய உள்ளுராட்சி சபைகள் 23 க்குமான தேர்தல் வாக்களிப்புக்கள் தொடர்பான அரசியல் கட்சிகளின் இறுதி பிரசார கூட்டங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தன.
இந்த நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் நேற்று கொழும்பு மாநகர சபைக்கான தமது இறுதி பிரசாரக் கூட்டங்களை மேற்கொண்டன.

இந்த வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இறுதி பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கொழும்பு குடிசைவாழ் மக்களுக்கு அமைக்கப்பட்டு வரும் புதிய வீடமைப்பு திட்டம் தொடர்பில் கருத்துரைத்தார்.
இந்த வீடடைப்பு திட்டமானது குடிசை வாழ் மக்களுக்கு ஒரு சிறந்த வரபிரசாதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே ஜிந்துபிட்டியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கம் கொழும்பை சோமாளியாவாக மாற்றிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் துமிந்த சில்வா, ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு குடிசைவாழ் மக்கள் அகற்றப்படுவதாக பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

இதனிடையே, கொழும்பு மாநாகர சபை தேர்தலில் தமது கட்சியே வெற்றி பெறும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதனிடையே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் சுவாமிநாதன், தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தமது கட்சியே என குறிப்பிட்டார்.

இதனிடையே ரத்திணபுரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர் எம் ரமேஸ், தமிழர்களின் தனித்துவத்தை பேனவே தாம் தனித்து போட்டியிடுவதாக குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபைக்கு போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினரும் விஜயகலா மனேஸ்வரனின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளருமான ஜீ பாலச்சந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

நுவரெலியா மாநகர சபையில் கடந்தகால சேவைகளை ஏனைய கட்சிகளும் பாராட்டியுள்ளன.

இந்த நிலையில், நுவரெலியா மாநகர சபை நிர்வாகத்தை ஐக்கிய தேசிய கட்சியால் தனித்துக் கொண்டுச் செல்ல முடியும்.

எனவே எதிர்வரும் காலத்திலும் ஐக்கிய தேசிய கட்சியே நுவரலிய மாநகர சபையை நிர்வகிப்பதற்கு மக்கள் ஆதரவை வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே, எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளளுராட்சி சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், தேர்தல்கள் தொடர்பான 105 முறைப்பாடுகள் தமது அமைப்புக்கு கிடைக்க பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவுடன், சகல சுவரொட்டிகள், பெனர்கள், பதாதைகள் மற்றும் அரசியல் கட்சி காரியாலயங்களின் கிளைகள் என்பவற்றை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய காவல்துறை மா அதிபர் என் கே இளங்ககோனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பிலான கடிதம் தேர்தல்கள் ஆணையாளரினால் காவல்துறை மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் இருக்கும் சகல கட்சியின் கிளை காரியாலயங்களையும் அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று நள்ளிரவுடன் தெலைபேசியின் ஊடாக குறுந்தகவல் ஊடாக மேற்கொள்ளப்படும் அரசியல் பிரசாரத்தையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் எந்த ஒரு நபரும் இந்த விதிகளை மீறினாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர், காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதனிடையே, உள்ளுராட்சி சபை தேர்தல்களின் வாக்களிப்பை கண்காணிக்கும் பொருட்டு இந்திய தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரிகள் சிலர் இலங்கை வந்துள்ளனர்.
ஆறுபேர் அடங்கிய இந்த அதிகாரிகள் குழு வாக்களிப்புக்கள் இடம்பெறும் எதிர்வரும் 8 ஆம் திகதி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று, வாக்களிப்பு தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர்.
பின்னர் இவர்களால் அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இவர்கள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசபிரியவையும் சந்த்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment