Monday, October 24, 2011

செனல் ஃபோவுக்கான பதில் காணொளி அமெரிக்காவில்!

Monday, October 24, 2011
செனல் ஃபோ காணொளிக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட பதில் காணொளி அடுத்த மாதம் 2ஆம் திகதி அமெரிக்காவின் வொஷிங்டனில் காண்பிக்கப்படவுள்ளது.

போரின் பின்னரான இலங்கையின் அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில் அமெரிக்க காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த காணொளி காண்பிக்கப்படவுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் இலங்கை நட்புறவு ஒன்றியத்தின் இணைத் தலைவர்களினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment