Monday, October 24, 2011

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது!

Monday, October 24, 2011
மீனம்பாக்கம் : போலி பாஸ்போர்ட்டுடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்த 2 பேரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். இலங்கையை சேர்ந்தவர் நாகலிங்கம் (26). அகதியாக தமிழகம் வந்த அவர், நீலகிரியில் வீடு எடுத்து தங்கியிருந்தார். கனடா செல்வதற்கு ஏஜென்ட் மூலம் இந்திய பாஸ்போர்ட் வாங்கினார். சென்னையில் இருந்து கொழும்பு வழியாக கனடா செல்வதற்காக இன்று காலை கொழும்பு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏறினார். அவரது பாஸ்போர்டை குடியுரிமை அதிகாரிகள் சோதித்து, போலி பாஸ்போர்ட்டில் செல்வதாக கூறி, கைது செய்தனர். இதேபோல், ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (35), போலி விசா மூலம் மலேசியாவுக்கு செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இன்று காலை ஏறினார். அவரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட்டில் பிடிபட்ட 2 பேரும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment