Thursday, October 6, 2011

அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படவில்லை ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Thursday, October 06, 2011
அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக அரச ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

18;ம் திருத்தச் சட்டத்தின் மூலம் தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்கள் வரையறுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க ஊடகங்களைப் போன்றே தனியார் ஊடகங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் சந்தர்ப்பம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பாக செயற்பட்டு வருவதாகவும் இதனை மக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊடகம் காத்திரமான சேவையாற்றி வருவதாகவும், நாட்டின் அபிவிருத்திப் பணிகள் குறித்து மக்களுக்கு அறிவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment