Thursday, October 06, 2011ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம் மற்றும் எச்.எம்.எம். ஹாரீஸ் ஆகியோருக்கு இடையில் முரண்பாடான நிலைமை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் ஹாரீஸ் தம்மை கடுமையாக தாக்கிப் பேசியதாக காசீம், கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
செப்டம்பர் மாதம் 18ம் திகதி கல்முனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது இவ்வாறு தம்மை கடுமையாக விமர்சனம் செய்ததாக காசீம், தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஹாரீஸிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தம்மை கட்சியிலிருந்து நீக்குவதற்கு காசீம் தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருவதாக ஹாரீஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாகவே தாம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment