Thursday, October 06, 2011யாழ். சுழிபுரம் பிரதேசத்தில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ள இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
வட்டுக்கோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே குறித்த இருவரும் கல்வி கற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
சம்பவ தினம் குறித்த மாணவி பாடசாலையால் வீடு திரும்பி தனியாக இருந்த வேளையிலேயே மாணவர் அவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
மாணவி சத்தமிட்ட போதும் மாணவர் வாயினுள் துணியைத் திணித்து விட்டு வன்புணர்வு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பிரஸ்தாப மாணவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment