Thursday, October 6, 2011

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்!

Thursday, October 06, 2011
இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய் நாளை மறுதினம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

அவர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமது விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து ரஞ்சன் மாத்தாய் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவா் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திக்கவுள்ளார்.

இதனைத் தவிர இரு தரப்பு விடயங்கள், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார செயலாளருடன் ரஞ்சன் மாத்தாய் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் தேர்ச்சி தொடர்பாகவும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஆராயவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment