Thursday, October 6, 2011

இலங்கை சென்றுள்ள இந்திய பிரதிநிதிகள் கடல் எல்லைகளை மீறி செல்வதை தடுத்து நிறுத்துவது குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன!

Thursday, October 06, 2011
கடல் எல்லைகளை மீறி செல்வதை தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கலந்துரையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளஇந்திய பிரதிநிதிகளுக்கும், இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.

இந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளின் மீனவர்கள், கடல் எல்லைகளை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் இலங்கை செல்ல உள்ளனர். இவர்கள் சர்வதேச கடல் எல்லைகள் தொடர்பாக உள்ள சட்டத்திட்டங்கள் குறித்து, இலங்கை அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த உள்ளனர்.

No comments:

Post a Comment