Thursday, October 06, 2011வடமராட்சியின் கம்பர்மலைப்பகுதியினில் கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து .பொதுமக்களது குடியிருப்புப்பக்கமாக வேலியோரமாக இக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.புத்தம் புதியதாக வெடி திறனுடன் அது காணப்பட்டதாக வல்வெட்டித்துறை காவற்துறையினர்; கூறுகின்றனர்.
அப்பகுதியில் குறித்த கைக்குண்டினை கண்டு தகவல் வழங்கியவர் யாரென்பது பற்றியும் அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. முதல் நாளிரவே அப்பகுதியினில் இக்கைக்குண்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தினையடுத்து அப்பகுதியினில் கடந்த சில நாட்களாக படையினரது ரோந்து நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டும் இருந்தது.
இதனிடையே யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த முன்னாள் புலி போராளிகள் பற்றிய புதிய பதிவு நடவடிக்கை ஒன்றினை படைத்தரப்பு ஆரம்பித்துள்ளது.இறுதி யுத்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு வழங்கி விடுவிக்கப்பட்ட முன்னாள் புலி போராளிகள் தகவல்களை திரட்டவே இப்பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கலானெ நம்பப்படுகின்றது. தம்மிடம் சரண் அடையாது ஒரு தொகுதி முன்னாள் புலி போராளிகள் பதுங்கியிருப்பதாக படைத்தரப்பு சந்தேகிக்கின்றது. அவ்வாறு பதுங்கியிருந்ததாக கூறி வவுனியாவில் நான்கு இளைஞர்கள் அண்மையில் கைது செற்றப்பட்டிருந்ததுடன் அவர்கள் நீதிமன்றிலும் ஆஜர் படுத்தப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கதாகும்;.
No comments:
Post a Comment