Wednesday, October 12, 2011தமிழகத்தில் இருந்து போதைப்பொருள் கடத்திய இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் இருவரை இந்திய காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தலைமன்னாரைச் சேர்ந்த நிக்கோலஸ்; சுதர்சன் மற்றும் முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த சிதம்பரம் சாந்தகுமார் ஆகிய இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே ஏராந்துறை கடற்கரையில் கியூ பிரிவு காவல்துறையிடம் பிடிக்கப்பட்டனர்.
இவர்கள் நெடுங்காலமாக ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை அனுப்புவதற்காக அவர்களை ஏர்வாடிக்கு வரச் செய்து, அவர்களுடன் கஞ்சாவையும் கடத்த திட்டமிட்டுள்ளனர்..
இந்த நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஏர்வாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment