Wednesday, October 12, 2011அகதிகளாக இந்தியா சென்றவர்களுக்கு இந்தியாவில் குழந்தை பிறந்த நிலையில் மீள இலங்கை திரும்பி தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் இலங்கை பிரஜாவுரிமையினை பெறுவதற்கான நடமாடும் சேவையினை இலங்கை சட்ட உதவிகள் ஆணைக்குழு எதிர்வரும் 15 ஆம் திகதி வவுனியாவில் செயற்படுத்தவுள்ளது.
எனவே பிரஜாவுரிமையினை பெறாதவர்கள் தமது ஆவணங்களை வவுனியா நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சட்ட உதவி ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடமாடும் சேவை இடம்பெறும் தினத்திற்கு முன்னராக ஒப்படைத்து தமது ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வதுடன் தமது தேவைகளை நடமாடும் சேவையின்போது நிறைவு செய்து கொள்வதனை இலகுபடுத்திக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment