Monday, October 10, 2011

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரின் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற எதிர்ப்பு!

Monday, October 10, 2011
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரின் மேன்முறையீட்டு மனு தொடர்பான வழக்கு விசாரணையை இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு தமிழக அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணைகள் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்த வழக்கு தொடர்பில் நியாயமானதும், பக்கச்சார்பற்றதுமான விசாரணையை மேற்வதற்கு தமிழகமே பொருத்தமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூவரின் மேன்முறையீட்டு மனு இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கு அவர்கள் சார்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி ராம் ஜெத்மாலனி ஏற்கனவே எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.

இந்தியாவின் சட்டமா அதிபருக்கும், அங்கீகரிக்கப்பட்ட தரப்பிற்கும் மாத்திரமே வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான மனுவை தாக்கல் செய்வதற்கு அதிகாரம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு தரப்பினரதும் வாதப்பிரதிவாதங்களை கேட்றிந்ததன் பின்னர் வழக்கு விசாரணையை இம்மாதம் 19 ஆம் திகதிவரை நீதிபதிகள் குழாம் ஒத்திவைத்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment