Friday, October 21, 2011

(புலி)கூட்டமைப்பின் மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிறேமச்சந்தின்ரனின் கனாடாவுக்கான வீசா நிரகரிப்பு!

Friday, October 21, 2011
எதிர்வரும் 30ம் திகதி அளவில் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமெரிக்கா செல்லவுள்ளனர்.

இக்குழுவில் சம்பந்தன், மாவை, சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்தின் ஆகியோர் அடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்லவுள்ள இவர்கள் கனடா சென்று அங்கு மக்களை சந்திக்கவும், அங்கு நிகழவுள்ள கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் ஏற்றபாடாகியுள்ளது.

இந்நிலையில் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கான கனடிய வீசா மறுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள கனடியத்தூதரம் இவருக்கான வீசாவினை மறுத்துள்ளது. இலங்கையின் ராஜதந்திர கடவுச் சீட்டினை கொண்டுள்ள இவரின் வீசா மறுக்கப்பட்டமை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் பலதரப்பட்ட சந்தேகங்களை வெளியிடுகின்றனர்.

அமெரிக்கா செல்லும் இவர் கனடாவில் உள்ள தனது மனைவி பிள்ளைகளை சந்திக்கும் நோக்கில் இவ்வீசாவிற்கான விண்ணப்பத்தினை சமர்பித்திருந்தபோதும் வீசா மறுக்கப்பட்டதன் பின்னணி இவர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

இலங்கையில் இவர் (புலி)கொலைக்கும்பலை இயக்கியதுடன் பல்வேறுபட்ட மனித உரிமைமீறல்களை மேற்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவ்வாறே சுரேஸ் பிறேமச்சந்திரனும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்பதைத் கனடா இதுவரையும் மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இவ்வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் செல்லவுள்ளனர். இக்குழுவில் சம்பந்தன், மாவை, சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்தின் ஆகியோர் அடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்லவுள்ள இவர்கள் கனடா சென்று அங்கு மக்களை சந்திக்கவும், அங்கு நிகழவுள்ள கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் ஏற்றபாடாகியுள்ளது. அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 231 மில்னர் வீதி SCARBOROUGHவில் அமைந்திருக்கும் பீட்டர் அண்ட் போல் மண்டபத்தில் கனடாவில் உள்ள தமது ஆதரவாளர்களை இரவு உணவுடன் கூடி சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. இவர்களை சந்திக்க விரும்புபவர்கள் கேள்விகள் கேட்க விரும்புவர்கள் ஆலோசனை கூற விரும்புபவர்கள், பண அன்பளிப்பு வழங்க விரும்புவர்கள் போன்ற அனைவரும் அழைக்கப்படுகின்றார்கள்.

    ReplyDelete