Friday, October 21, 2011
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைத்த விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளார். இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் (மாநகராட்சி மேயர் தேர்தல்) விஜயகாந்தின் தேமுதிக கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலையோ அல்லது வெற்றி பெறவோ இல்லை. தங்கள் கட்சி பலம் இந்த உள்ளாட்சி தேர்தலில் தெரியும் என மார் தட்டிய விஜயகாந்த் தற்போது மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளார்.
மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வார்டு என அனைத்திலும் பெரிய கட்சிகளான திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் கடும் போட்டி நிலவுகிறது. அதுமட்டுமின்றி மாநகராட்சிகளிலும் சரி, நகராட்சிகளிலும் சரி அதிமுகவின் வெற்றியை தேமுதிகவின் பிரிவு எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. பேரூராட்சிகளில்தான் இக்கட்சிக்கு ஓரளவு வார்டுகள் கிடைத்து வருகின்றன. தபால் ஓட்டுக்களிலும்(சென்னை) கூட தேமுதிகவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் கிடைக்கவில்லை.
பல இடங்களில் ஓட்டே கிடைக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றி பிறகு தேமுதிகவிற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அடி இந்த உள்ளாட்சி தேர்தல்.

No comments:
Post a Comment