Friday, October 21, 2011
தோழர் காத்தமுத்து விசுவலிங்கம் நாபா இவர் நேற்றிரவு சென்னை மருத்துவமனையில் அகாலமரணமானார். அவர் மட்டக்களப்பு சித்தாண்டியை பிறப்பிடமாக கொண்டவர். 1983ல் இருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து சமூக அரசியல் விடுதலைக்காகப் பாடுபட்டவர். இந்தியாவில் புழல் அகதிகள் முகாமில் தனது மனைவி மகளுடன் வாழ்ந்து வந்தவர். 17ம் திகதி அவர் தனது ஆட்டோவை ஓட்டிச் சென்ற போது ஒரு விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். இதற்கு முன்னரும் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் அவரது ஒரு காலில் முறிவு ஏற்பட்டது. ஆனாலும் அவர் சோர்ந்துவிடாத அயராத உழைப்பாளியாக இருந்தார். அவர் தோழர்களாலும் நண்பர்களாலும் அயலவர்களாலும் மிகவும் நேசிக்கப்பட்டவர். எல்லோருக்கும் உதவி புரியும் மனோபாவம் அவருக்கு இருந்தது. எப்போதும் இன்முகத்துடன் காணப்படுவார். அவர் நேற்றிரவு சென்னை பொது வைத்தியசாலையில் காலமானார் அவரின் இறுதிச் சடங்குகள் இன்று (20.10.2011) சென்னை புழலில் நடைபெறும். அன்னாரின் மறைவிற்கு பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
ஈழமக்களின் விடிவிற்காக--தோழனேஉனை
ஈன்றெடுத்தாள் எங்கள் அன்னைனொருத்தி
ஈன்றவர் நெஞ்சம் குளிர்ந்திடவே--தோழா
ஈகையோடு உன்உயிர் கொண்டு சென்றாய்--களம்நோக்கி
கடமை செய்ய இளைஞர் எல்லாம் புறப்பட்ட-- காலம் அது
கர்ப்பபைகளிலே சபதம் எடுத்தவர்கள்--எங்கள் தோழன்
கண்ணீர்விடும் மக்களின் விடிவுஒன்றேதான் தீர்மானம்
கர்மம் தனைமுடிக்க காத்திருந்த எங்கள் தோழன்இவன்
சார்ந்த மனம் படைத்த எங்கள் தோழன் இவன்
சதிஎண்ணம் இல்லாது சரித்திரம் படைக்க புறப்பட்டவர்கள்
சாத்தான் குணம் படைத்த சதிகாரா பாசிபுலிகளின்
சகோதரயுத்தத்தால் தாய்மண்ணைவிட்டு விரட்டப்பட்டவர்கள்..
அயல் நாட்டில் வாழ்ந்தாலும் எங்கள்--தோழனின் நெஞ்சில்
அப்பாவிமக்களின் விடியற்கனவுதான் என்றும்--சிறைகளின்
அடிமை விலங்கை உடைத்து எங்கள் மக்களின்
அமைதிவாழ்வை விரும்பிய எங்கள் தோழன் இவன்
மரணத்திலும் மனிதநேயத்தை வென்ற எங்கள்--நாபாவின் நாமம்
மரணித்த உன்நாமம் மரபு என்றும்கூறும்--தோழா
மரணித்த காரணம் மயங்காதே கலங்காதே--தோழா
மக்களின் நினைவுடனே மரணம் நீ கண்டுவிட்டாய்--தோழா
விட்டுசென்ற பணிகள் நாம் தொடர்வோம்--தோழா
விரைந்து முடிப்போம் விடுலை கண்போம்
விபத்தில் மடிந்தாலும் அன்றும் இன்றும்
விசாலமான உன் மனம் கண்ட சொர்ப்பணம்
விடிவெள்ளியாய் எங்கள் கண்முன் என்றும் வீற்றிருக்கும் தோழா
பத்மநாபாஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
(பத்மநாபா EPRLF) ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது

No comments:
Post a Comment