Wednesday, October 12, 2011கரையோரப் பாதுகாப்பு பணிகளை விரிவுபடுத்துவதற்காக கடற்படையினர் மேலும் ஒரு படகை கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு நாளை வழங்கவுள்ளனர்.
கடற்படையினர் ஏற்கனவே தமது திணைக்களத்திற்கு படகு ஒன்றை வழங்கியிருந்ததாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் தயா தர்மப்பிரிய தெரிவித்தார்.
இன்னும் சில நாட்களில் கரையோரப் பாதுகாப்புப் பணிகளுக்காக மேலும் ஒரு படகை கடற்படையினர் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை சூழவுள்ள கரையோரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இதுவரை 10 படகுகளை தமது திணைக்களம் ஈடுபடுத்தியுள்ளதாக ரியர் அட்மிரல் தயா தர்மப்பிரிய மேலும் கூறினார்.
No comments:
Post a Comment