Wednesday, October 12, 2011தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகளின் ஒரு தொகுதியினர் முதற் தடவையாக இன்று வர்த்தகக் கப்பல் மூலம் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 15 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொழும்பை வந்தடையவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சுமார் இரண்டு இலட்சத்து 76 ஆயிரம் பொது மக்கள் இடம்பெயர்பெயர்ந்ததாகவும், பலர் இந்தியாவில் தஞ்சம் அடைந்ததாகவும் ஐக்கிய நாடுகளின் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
முதற்தடவையாக கப்பல் மூலம் அகதிகள் நாடுதிரும்புவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதால் தமது உடமைகளுடன் அவர்கள் நாடு திரும்புவதற்கான வசதிகள் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் எட்ரியன் அட்வர்ட்ஸ் சுட்டிக்காட்டிள்ளார்.
No comments:
Post a Comment