Wednesday, October 12, 2011
ஜெனீவா : இந்தியா, சுவிட்சர்லாந்து இடையிலான திருத்தப்பட்ட இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளதாக, சுவிஸ் நிதித் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் சுவிஸ் நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் பற்றிய தகவலோடு இனி வரி ஏய்ப்பு தகவல்களையும் இந்தியா பெற முடியும். இந்தியா, சுவிட்சர்லாந்து இடையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திருத்தப்பட்ட இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி, வரி மோசடி தொடர்பாக வங்கி தகவல்களை மட்டும் இந்தியா பெற்று வந்தது. திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சுவிஸ் நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யும் இந்தியர்களின் கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு தகவல்கள் ஆகியவற்றை இந்தியா பெறமுடியும். திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு, கடந்த ஜூன் 17ம் தேதி சுவிஸ் பார்லிமென்ட் ஒப்புதல் அளித்தது. அதன்பேரிலான சுவிஸ் மக்களின் கருத்துக் கணிப்புக் கேட்பு, இம்மாதம் 6ம் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக, சுவிஸ் நிதித்துறை தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம், சுவிட்சர்லாந்தில் 2012, ஜனவரி 1ம் தேதி முதலும், இந்தியாவில், 2012, ஏப்ரல் 1ம் தேதி முதலும் இந்த ஒப்பந்தத்தின் விதிகள் செல்லுபடியாகும்.

No comments:
Post a Comment