Sunday, October 30, 2011

வட மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்!

Sunday, October 30, 2011
வட மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டின் நடுப்பகுதியளவில் வட மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளரும் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டிருந்ததாக, அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக வட மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதே தமது பிரதான குறிக்கோளாக அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். நிச்சயமாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் மீள் குடியேற்றம், நிலக்கண்ணி வெடி அகழ்வு போன்ற காரணிகளினால் தேர்தல்களை உரிய காலத்தில் நடாத்த முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனவாத பிரச்சாரங்களின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றியீட்டியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் இனவாத பிரச்சாரங்களுக்கு மக்கள் துணை போக மாட்டார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment