Sunday, October 09, 2011
அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசீயா புட்டீனாஸிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அம்பாறை அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார்.
அண்மையில் விக்கிலீக்ஸில் இணையத்தில் வெளியான தகவல்கள் தொடர்பில் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் போது தேர்தல் முடிவுகளை முதலில் அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்குமாறு அம்பாறை அரசாங்க அதிபர் உள்ளிட்ட எட்டு அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்ததாக புட்டீனாஸ் தெரிவித்துள்ளார்.
அம்பாறை அரசாங்க அதிபர் தம்மிடம் இதனைக் குறிப்பி;ட்டதாக புட்டீனாஸ் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ள கேபிள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அம்பாறை அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளை அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்குமாறு எவரும் கோரவில்லை எனவும், அவ்வாறான தகவலை அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்களுக்கு முன்னதாக அமெரிக்கத் தூதுவரை தாம் சந்தித்த போதிலும் யுஎஸ் எயிட் நிறுவனம் பற்றியும், தேர்தலுக்கான ஆயத்தங்கள் பற்றியுமே கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கத் தூதுவருக்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளை பல்வேறு தரப்பினரும் உறுதிப்படுத்தியதன் பின்னரே முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, தேர்தல் முடிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என கருத்து பிழையானது என அம்பாறை அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து அமெரிக்க அரசாங்கத்திற்கு அறிவிக்க உத்தேசித்துள்ளதாக தூதுவர் புட்டீனாஸ் அம்பாறை வர்த்தகர்களிடம் தெரிவித்தாக கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளருக்கு முடிவுகள் அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்னதாக அலரி மாளிகைக்கு முடிவுகளை அனுப்பி வைக்குமாறு எட்டு அரசாங்க அதிபர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக வர்த்தர்களிடம் புட்டினாஸ் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விக்கிலீக்ஸில் வெளியாகும் கருத்துக்கள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் எதுவித கருத்துக்களையும் வெளியிடுவதில்லை என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான கொழும்புத் தூதரகம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment