Wednesday, October 26, 2011

தொழிலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்து அமைச்சினால் உதவி!

Wednesday, October 26, 2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ள அனர்தத்தின் போது பாதிக்கப்பட்ட மேஸன் தொழிலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்து அமைச்சினால் நேற்று (25.10.2011) மாலை தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த வைபவம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், அமைச்சின் செயலாளர் திருமதி மரீனா முஹம்மட், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட அமைச்சின் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட 370 மேஸன் தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதேபோன்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment