Wednesday, October 26, 2011நேற்று (25.10.2011) மாலை தொடக்கம் சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சில கைதிகள் இன்று (26.10.2011) காலை கூரையை விட்டு இறங்கி தமது உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இன்று காலை விஜயம் செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.அப்துல்லா கூரையின் மேல் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதிகளுடன் உரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
இக்கைதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்ட நீதிபதி இப்பிரச்சினைகளை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து இக்கைதிகள் கூரையிலிருந்து கீழே இறங்கி தமது உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இதன் போது சிறைச்சாலையின் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்த விளக்கமறியல் கைதியின் மரணம் தொடர்பான விசாரணை நடாத்தப்படல் வேண்டும், மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வாரத்தில் ஒரு தடைவ வரும் வைத்தியரை வாரத்தில் இரண்டு நாட்கள் வரச்செய்ய வேண்டும், அத்தோடு அவ்வைத்தியரை மாற்றி வேறு ஒரு வைத்தியரை மட்டக்களப்பு சிறைச்சாலைக்குநியமித்தல் வேண்டும், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு சுகயீனம் எற்படும் போது அவர்களை தேவையேற்படின் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்குவதுடன் அவர்களுக்கு தங்கியிருந்து சிகிச்சை வழங்கத்தேவையாயின் கைதிகளை வைத்திய சாலையில் தங்க வைத்து சிகிச்சை வழங்கப்படல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சிறைச்சாலைக்கு வருகை தந்து இப்பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்க வேண்டுமென்ற வேண்டுகோளை விடுத்த முப்பதுக்கு மேற்பட்ட சிறைச்சாலையிலுள்ள கைதிகள் நேற்று பிற்பகள் தொடக்கம் சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment