Wednesday, October 26, 2011கடுவெல பிரதேசத்தில் இஹல பொமிலிய பிரதேசத்தில் ஒருவரை கட்டிவைத்து தங்காபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேககநபர்களிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்றையும் மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.
கடந்த மாதம் 12 ஆம் திகதி வீட்டின் உரிமையாளரை கட்டிவவைத்து துப்பாக்கியைக் காட்டி தங்காபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமே இவ்வாறு தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் திருடிய வீட்டு உரிமைாளரின் மோட்டார் சைக்கிளை தொம்பே பொலிஸார் கண்டு பிடித்தள்ளனர்.
சம்பவத்தடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் ஒரு இராணுவ வீரரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment