Wednesday, October 26, 2011

மஹிந்த சமரசிங்ஹ பான் கீ மூனை சந்திக்கவுள்ளார்

Wednesday, October 26, 2011
அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ இன்றைய தினம் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனை சந்திக்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொது அமர்வின் மூன்றாவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டதன் பின்னரே இந்த சந்திப்பு இடம் பெறவுள்ளது.

இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் இதன்போது மீளாய்வு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அரசாங்கத்தினால் முன் எடுக்க உத்தேசித்துள்ள மனிதாபிமான திட்டம், மற்றும் தருஸ்மன் அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு என்பன குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு தெளிவுப்படுத்தவுள்ளார்.

இதற்கிடையில் வடக்கின் அபிவிருத்தி, புலி முன்னாள் உறுப்பினர்களின் புனருத்தாபனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது அரசாங்கம் முன் எடுக்கும் வேலைத்திட்டம் என்பன குறித்து அமைச்சரினால் இதன்போது தெளிவுப்படுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment