Thursday, October 06, 2011மனித உரிமை செயற்பாட்டு திட்டங்களை உரிய வகையில் முன் எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை செயற்பாட்டு திட்டங்களை சகல அமைச்சுக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனித உரிமை செயற்பாட்டு திட்டங்களை கண்காணிப்பதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment