Thursday, October 6, 2011

இலங்கையின் அண்மைக்கால போக்கு மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக சொல்ஹெய்ம்க்கு- சுமந்திரன் எடுத்துரைப்பு!

Thursday, October 06, 2011
இலங்கையின் அண்மைக்கால போக்கு மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் ஏரிக் சொல்ஹெய்ம்க்கு தெரிவித்துள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்தார்.

நோர்வேக்கு கடந்த வாரம் விஜயம் செய்திருந்த தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் ஏரிக் சொல்ஹெய்மைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து விரிவான சந்திப்பொன்றை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்துடனான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைகளில் காணப்படும் முன்னேற்றங்கள் அவற்றில் உள்ள தடைகள் தொடர்பில் கலந்துரையா டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் தமிழர் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்கள், அரசின் அத்துமீறலான நடவடிக்கைகள் தொடர்பில் கலற்துரையாடியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment