Friday, October 21, 2011

நிபுணர் குழு தயாரித்த அறிக்கை ஐ.நா அறிக்கையாகும் - மர்ஸூக் தரூஸ்மான்!

Friday, October 21, 2011
இலங்கை தொடர்பாக தமது தலைமையிலான நிபுணர் குழு தயாரித்த அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் அறிக்கையாகும் என மர்ஸூக் தரூஸ்மான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை தருஸ்மான் அறிக்கை என குறிப்பிடப்படுகின்றமை தொடர்பில் நியூயோர்க் நகரில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவின் ஊடாகவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் மர்ஸூகி தருஸ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக குறித்த அறிக்கையை இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கை என அடையாளப்படுத்த முடியும் என அவர் கூறியதாக இன்னர் சிட்டி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment