Friday, October 21, 2011
பயங்கரவாதம் தொடர்பாக சில நாடுகள் இரண்டு விதமான கொள்கைகளை கடைபிடித்து வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற அந்த நாட்டு அரசாங்க பிரதிநிதிகளுடான சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
33 வருடங்களாக கொடிய பயங்கரவாதத்தை எதிர்நோக்கிய இலங்கை தற்போது, அபிவிருத்தி பாதைக்குள் பிரவேசித்து வருவதுடன், அபிவிருத்தியின் அறுவடையை பெற்றுக்கொள்ள சர்வதேசத்தின் உதவி அவசியம் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நோர்வே வெளிவிவகார அமைச்சர் யுனாஸ் காஸ்டரிடம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் தொடர்பான உலகில் உள்ள சில நாடுகள் இரண்டு விதமான கொள்கைகளை கடைபிடித்து வருகின்றன. உலகில் எந்த இடத்தில் இடம்பெறும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒரே விதமான தண்டனை, ஒரே சட்டம், ஒரே கொள்கை செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் இதன் மூலம் உலகை அழிக்கும் கொடிய பயங்கரவாத்தை உலகில் இருந்து ஒழித்து கட்ட முடியும் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment