Saturday, October 22, 2011உடவலவ, பனகடுவ பிரதேசத்தில், கடந்த 13ஆம் திகதி இரவு, வீடொன்றின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
எதிர்வரும் சில தினங்களில் சந்தேநகபர்களை கைதுசெய்ய முடியும் என இந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தகரும் அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகள் ஆகியோரே கொலை செய்யப்பட்டனர். வர்த்தகரி்டமிருந்து பணம் அபகரிக்கும் நோக்குடன் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வீட்டிற்குள் புகுந்த சந்தேகநபர்களை வீட்டிலிருந்தவர்கள் அடையாளம் கண்டதை அடுத்தே அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸர் குறிப்பிடுகின்றனர்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தவின் வழிகாட்டலில் ஆறு பொலிஸ் குழுக்கள் இந்த கொலைச் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment