Saturday, October 22, 2011

புலிகள் தொடர்பில் நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சர்வதேச ரீதியாக தாக்கம் செலுத்தும்-வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது!

Saturday, October 22, 2011
புலிகள் தொடர்பில் நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சர்வதேச ரீதியாக தாக்கம் செலுத்தும். இந்தக்கருத்தை த வாசிங்டன் போஸ்ட் செய்திதாள் வெளியிட்டுள்ளது.

புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஐந்து தமிழர்களுக்கு இரண்டு முதல் 6 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அவர்களுக்கு 20 வருடங்கள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறைந்தளவு தண்டனையே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் புலிகளை பயங்கரவாதிகளாக கொள்ள முடியாது என்று ஹேக் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய கொள்கைகளின் அடிபடையில் புலிகளை பயங்கரவாதிகளாக கருதமுடியாது.

புலிகள் கடந்த 27 வருடங்களாக உள்நாட்டு போரில் ஈடுபட்டிருந்தனர்.தவிர சர்வதேச ரீதியான போரில் ஈடுபட்டிருக்கவில்லை.

இதன் காரணமாக அவர்கள் மீது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தலாமே தவிர, அவர்களை பயங்கரவாதிகள் என்று கொள்ள முடியாது என்று ஹேக் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில் இது சர்வதேச ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று த வோசிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

புலிகள் இந்த நீதிமன்றத்தின் அறிவிப்பு அடிப்படையில், தம்மீதான தடைகளை நீக்கிக் கொள்ள முயற்சி செய்யலாம்; எனவும் வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment