Sunday, October 23, 2011
எதிர்வரும் வாரம் அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனை சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் எதிர்வரும் 25 ம் திகதி அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக்கின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனை சந்திப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரனிடம் வினவப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அவ்வாறான தடை குறித்து தமது கட்சிக்கு உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

No comments:
Post a Comment