Friday, October 21, 2011
வேதாரண்யம்: நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் கத்தி முனையில் மிரட்டி தாக்கிவிட்டு மீன்களை பறித்துச் சென்றனர்.
நாகை மாவட்டம் பூம்புகார் அடுத்த புதுப் பேட்டை மீனவர்கள் மாணிக்கசாமி, ரகு, மணிரத்தினம், செல்வம் ஒரு படகிலும், விநாயகமூர்த்தி, ராஜேந்திரன், ரவீந்திரன், உலகநாதன் மற்றொரு படகிலும்,
சந்திரசேகரன், கவி, சுகுந்தன், கதிர்வேல் வேறு ஒரு படகிலும் கடந்த 18ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, 2 படகுகளில் வந்த 5 இலங்கை மீனவர்கள் நாகை மீனவர்களின் படகுகளில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி மீனவர்களை தாக்கினர். அவர்கள் வைத்திருந்த மீன்களையும் பறித்துக்கொண்டு
விரட்டியடித்தனர்.
இதையடுத்து அவர்கள் நேற்று காலை படகுகளில் கரை திரும்பினர். இலங்கை மீனவர்கள் தாக்குதல் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர காவல்படை போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே காரைக்கால்மேடு பகுதியை சேர்ந்த அய்யப்பன்(20), விஜயபாலன்(24), குமார்(19), காத்தமுத்து(65) படகிலும் இலங்கை மீனவர்கள் ஏறி சோதனையிட்டனர்.
அதில் மீன்கள் இல்லாததால் 4 மீனவர் மற்றும் அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் பலரையும் விரட்டியடித்தனர்.
இச்சம்பவத்தால் மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.
ராமேஸ்வரம்: இதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 391 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட படகுகள், கச்சத்தீவு அருகே
மீன் பிடித்துக் கொண்டிருந்தன.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மறித்து இனி இங்கு மீன் பிடிக்கக்கூடாது என எச்சரித்து மிரட்டி விரட்டியடித்தனர்.

No comments:
Post a Comment