Friday, October 21, 2011

சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை – மட்டக்களப்பில் 10 மாதங்களில் 650 பேர் மீது வழக்குத்தாக்கல்!

Friday, October 21, 2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையிலீடுபட்டுவந்த 650 பேர் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி, மட்டக்டகளப்பு, ஏறாவூர், வாழைச்சேனை, மற்றும் வாகரை ஆகிய நீதிமன்றங்களில் இவர்கள்மீது வழக்குத்தொடரப்பட்டு சுமார் 30 இலட்சம் ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்டத்தின் 14 செயலகப்பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது சட்டவிரோத மதுபான தயாரிப்பு, அனுமதிப்பத்திரமின்றி சாராயம் மற்றும் பியர் விற்பனை செய்தல், கஞ்சா கடத்தல் அபின் விற்பனை, சட்டவிரோத சிகரட் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக மாவட்ட மதுவரி திரணைக்கள பொறுப்பதிகாரி கே.ரஞ்சன் தெரிவித்தார்.

யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மீளக்குடியேறிய வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிலேயே அதிகமானோர் கைதானதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment