Monday, October 10, 2011
இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள ரஞ்சன் மாதாய்:ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு!
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது...
இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள ரஞ்சன் மாதாய்!
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாதாய், வடபகுதிக்கான தனது விஜயத்தின் போது இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளார்.
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாதாய், நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து தெளவுபடுத்தியதாக யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் நியஸ் பெஸ்டுக்குத் தெரிவித்தார்.
இதன்போது காங்கேசன்துறை துறைமுகத்தில் கப்பல் தளத்தின் மறுசீரமைப்பு பணிகளை இந்திய வெளிவிவகார செயலாளர் பார்வையிட்டுள்ளார்.
இந்திய நிதியுதவியின் கீழ் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள நலன்புரித் திட்டங்களையும் ரஞ்சன் மாதாய் கண்காணித்துள்ளார்.
இதேவேளை வடமாகாண ஆளுநரை அவரின் அலுவலகத்தில் சந்தித்து ரஞ்சன் மாதாய் கலந்துரையாடியதுடன், மீள்குடியேறிவர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இதன்போது அவருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ் அரச அதிபர் கூறினார்.
இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இந்திய வெளிவிவகார செயலாளர் தன்னிடம் கேட்டறிந்து கொண்டதாக இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
குறிப்பாக மாதகல் பிரதேசத்தில் மீள்குடியேறிய மீனவர்கள், இந்திய மீனவர்களால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ரஞ்சன் மாதாய்க்கு தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே இந்திய மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடுவார்களாயின் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் வழியேற்படும் என சுட்டிக்காட்டியதாகவும் யாழ் அரச அதிபர் கூறினார்.
இதனை செவிமடுத்த இந்திய வெளிவிவகார செயலாளர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தாவிடம் இந்த விடயம் குறித்து கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியதாகவும் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது முல்லைத்தீவு பிரதேச மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் வட மாகாண ஆளுநரிடம் ரஞ்சன் மாதாய் கேட்றிந்து கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment