Tuesday, October 04, 2011திருமண வீடொன்றில் ஏற்பட்ட கைகலப்பை சமாதானப்படுத்தச் சென்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று மொறட்டுவை மோதரை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (3) அதிகாலை ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக மொறட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். மொறட்டுவை, மோதரை பொலிஸ் பாதுகாப்பு நிலையத்தில் பணியாற்றிய 28 வயதையுடைய கொன்ஸ்டபிள் சமரவிக்ரம என்ற உத்தியோகத்தரே படுகொலை செய்யப்பட்டார்.
திருமண வீடொன்றில் இரு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறே இக் கொலைக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொலை நடைபெற்ற சில மணி நேரங்களில் திடீர் சுற்றிவளைப்பின் மூலம் சந்தேகத்தின் பேரில் ஐவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொன்ஸ்டபிளின் சடலம் பாணந்துறை அரச ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment