Tuesday, October 04, 2011முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற ஆசனம் மீளப்பெறப்பட்டதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவுக்கு பதிலாக, தற்போதைய தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மாற்றீடு செய்வது தொடர்பாக இன்றைய தினம் விசாரணைகள் இடம்பெற்றன.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பதில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் அர்ஜுனா ஒபேசேகர தற்போதைய தேர்தல் ஆணையாளரின் பெயரை பிரதிவாதியாக குறிப்பிடுவதில் ஆட்சேபனை இல்லை என அறிவித்தார்.
அவர் சார்பில் தாம் நாளை தினம் நீதிமன்றில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பதில் சொலிஸ்டர் ஜெனரல் கூறினார். இந்த மனுமீதான விசாரணையை நீதிபதிகள் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment