Tuesday, October 4, 2011

சப்புகஸ்கந்த பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் - ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, October 04, 2011
சப்புகஸ்கந்த சமூர்த்தி மாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது படுகாயமடைந்த குறித்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சப்புகஸ்கந்த பகுதியைச் சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

No comments:

Post a Comment