Wednesday, October 12, 2011

துமிந்த தனது கைத்துப்பாக்கி மூலமே பாரத லஷ்மன் பிரேமச்சந்திரவைச் சுட்டார்!

Wednesday, October 12, 2011
கொழும்பு, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா தன்னிடமிருந்த கைத்துப்பாக்கி மூலமே பாரத லஷ்மன் பிரேமச்சந்திரவைச் சுட்டார் என பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கார்ச் சாரதியான ‘போல சமன்’ என்றழைக்கப்படும் லியனகே சமன் சாந்த பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார் என கொழும்பு நீதிமன்ற மேலதிக நீதவான் பிரகஷ்ஷா ரணசிங்க முன்னிலையில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லேரியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பான வழக்கு விசாரனை இன்று கொழும்பு நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடம்பெற்ற இடத்துக்குத் துமிந்த சில்வாவுடன் சுமார் 20 வாகனங்களில் சுமார் நூறு பேரளவில் வந்தனர் என்றும் அப்போது வாகனத்திலிருந்து இறங்கிய துமிந்த தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் பாரத லக்ஷமனை நோக்கிச் சுட்டதுடன் “ பாரதவைச் சுடுங்கள் எனக் கூறினார் எனவும் பாரதவின் கார்ச் சாரதியான சமன் சாந்த பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் கூறியிருந்தார் எனவும் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிரிஹானை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விதானலாகே அநுர துஷாரத மெல் (51905) என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

குறித்த கான்ஸ்டபிள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பாதுகாப்புப் பிரிவில் செயற்பட்டவராவார் இவர்.நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணி வகுப்பில் இனங்காணப்பட்டார். குறித்த கான்ஸ்டபிளும் பாரத லக்ஷ்மன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரென பாரதவின் சாரதி அடையாளம் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment