Thursday, October 13, 2011

மாவை சேனாதிராஜாவின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு!

Thursday, October 13, 2011
அவசரகால சட்டத்தின் கீழ் ஐந்து விதிமுறைகள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த அடிப்படை உரிமை மனுவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமன்திரன் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

சட்டத்தரணி விளக்கமளித்தை அடுத்து கருத்து வெளியிட்ட பிரதி சொலிஸ்டர் ஜெனரால் ஷவேந்திர பெர்னாண்டோ, குறித்த விதிமுறைகள் நிர்வாகத்திற்கோ அல்லது நிறைவேற்று அதிகாரத்திற்கோ உட்பட்டவை அல்லவென சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக மனுதாரர் அது தொடர்பில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமை கிடையாது எனவும் அவர் வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதம நீதியரசர் காலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க நீதயரசர்களான பீ.ஏ.ரத்னாயக்க மற்றும் எஸ்.ஐ.எம்.இமாம் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் குறித்த அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment