Thursday, October 13, 2011
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க நடவடிக்கைளுக்கான பணிப்பாளர் நாயகமுமான பாரத லஷ்மன் பிரேமசந்தரவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த மிரிஹான பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அனுர துஷார டி மெல் என்ற பொலிஸ் கான்ஸ்டபிலே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
பாரத லஷ்மன் பிரேமசந்திர மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரை அவரது சாரதி அடையாளம் கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவிக்கிறது.

No comments:
Post a Comment