Friday, October 14, 2011
இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, செக் குடியரசின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று இலங்கை வந்துள்ளனர்.
ஒரு நாளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தத் தூதுக்குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்தல், இங்கினியாகல மின் உற்பத்தி நிலையத்தின் புனரமைப்புகள், கொழும்பு-கண்டி திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்திற்குக் கடன் வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
பிரதமர் டி.எம். ஜயரத்ன, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் பெசில் ராஜபக்ஸ ஆகியோருடன் இந்த தூதுக்குழுவினர் கலந்தரையாடியுள்ளனர் என்று பெற்றோலிய தொழிற்றுறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment