Friday, October 14, 2011
வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில், சண்டே லீடர் பத்திரிகைக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாக டெய்லிமிரர் பத்திரிகையில் செய்தி பிரசுரமானதாக, இந்த வழக்கின் சாட்சியங்களை மீளாய்வு செய்யும் சட்டத்தரணி நலின் லத்தூவஹெட்டி தெரிவித்துள்ளார்.
மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேல் நீதிமன்றத்தின் தீபாலி விஜேசுந்தர தலைமையில், ரீ.எம்.பி.பீ. வராவெவ மற்றும் ஏ.இஸெட். ரஸீன் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
டெய்லிமிரா் பத்திரிகையில் பிரசுரமான செய்தியில் உள்ள சொற்களே சண்டே லீடர் பத்திரிகையின் செய்தியிலும் உள்ளடக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணி நலின் லத்தூவஹெட்டி கூறினார்.
அந்த செய்தியை அவ்வாறே பிரிதியாக்கம் செய்துள்ளதுடன், முன்னாள் இராணுவத் தளபதியுடனான நேர்காணலின் போது தெரிவிக்கப்பட்ட கருத்தாக பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
விருதினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, அந்த செய்தி மூன்றாம் தரப்பிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல எனவும், முன்னாள் இராணுவத் தளபதியுடனான நேர்காணலின் போது தெரிவிக்கப்பட்ட கருத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குழுவிடம் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
வழக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், வழக்கின் முறைப்பாட்டாளர்கள் குறித்து இந்த அதிகாரியிடம் தெரிவிக்க முடியாமல் போனதாகக் குறிப்பிட்ட சட்டத்தரணி, இத்தகைய சாட்சியங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:
Post a Comment